முதல் சர்வதேச சதம் விளாசிய 23 வயது ஆப்கான் வீரர்! 191 ரன் கூட்டணி..திணறும் ஜிம்பாப்பே
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் 191 ஓட்டங்கள் குவித்தனர்.
அடல்-மாலிக் கூட்டணி
ஹராரேயில் ஜிம்பாப்பே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
ஜிம்பாப்பே நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அப்துல் மாலிக், செதிகியுல்லா அடல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இருவரும் நங்கூரம் போல் நின்று ஆடியதால் ஜிம்பாப்பே பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறினர்.
191 ரன் கூட்டணி
அடல் தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து, மாலிக்கும் முதல் அரைசதம் அடித்தார்.
இந்த கூட்டணி 210 பந்துகளில் 191 ஓட்டங்கள் குவித்தது. அப்துல் மாலிக் 101 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், அடல் 124 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |