2024யில் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்! நம்பிக்கையுடன் கூறிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணிகளுக்கே அதிர்ச்சி கொடுத்து வெற்றிகளை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, விளையாடிய தொடர்களில் சில ஆச்சரிய வெற்றிகளையும் பெற்றது.
Twitter (@ACBofficials)
தற்போது ஷார்ஜாவில் அமீரக அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
@ACBofficials
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில்,
'2023யில் ஆப்கானிஸ்தான் அடலானின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது! 2024யில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். அடலனோவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!' என தெரிவித்துள்ளது.
Reflecting on AfghanAtalan's Success in 2023! Looking forward to taking it to the next level in 2024. ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) January 1, 2024
All the best for the new year, Atalano! ?#AfghanAtalan pic.twitter.com/VlzxdluUZX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |