125 ரன் வித்தியாசத்தில் ஆப்கான் இமாலய வெற்றி! 5 விக்கெட் வீழ்த்தி சாதித்த வீரர்
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை வீழ்த்தி சாதனை படைத்தது.
கயானாவில் நடந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஆப்கான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜட்ரான் உகாண்டாவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
இவர்களது கூட்டணி 87 பந்துகளில் 154 ஓட்டங்கள் குவித்தது. ஜட்ரான் 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
????: ??
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 4, 2024
?????: ??
?????: ?
?????: ?
?.????: ???.??@RGurbaz_21 set the stage on fire this evening against Uganda. ?#AfghanAtalan | #T20WorldCup | #AFGvUGA | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/7Xg3wthXOv
அதனைத் தொடர்ந்து குர்பாஸ் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ரன் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின் களமிறங்கிய உகாண்டா அணி பஸல்ஹக் பரூக்கி பந்துவீச்சுக்கு இரையானது. மறுமுனையில் நவீன் உல் ஹக் மற்றும் ரஷீத் கான் பந்துவீச்சில் மிரட்ட, உகாண்டா அணி 16 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பரூக்கி 9 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஆடவர் உலகக்கிண்ணத் தொடரில் சிறந்த பந்துவீச்சை கொடுத்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் அவரே பெற்றார். ரஷீத் கான், நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
??????????? ???! ?#AfghanAtalan have put on a terrific all-round performance to beat Uganda by 125 runs in their opening game at the #T20WorldCup 2024. ?#AFGvUGA | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/hRUuQ99zBx
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 4, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |