டி20 கிண்ணத்தை தட்டித் தூக்கிய ரஷித்கான் படை
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பென்னெட் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளும், முஜீப் மற்றும் ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் நைப் 22 ஓட்டங்களும், ஓமர்சாய் 34 ஓட்டங்களும் ஓட்டங்களும் விளாசினர்.
முகமது நபி ஆட்டமிழ்க்காமல் 18 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |