2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள தந்தை - மகன்
afganistan father son duo registered name for 2027 ipl auction: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு, ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபியும், அவரது மகன் ஹசன் இசாக்கீலும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
2027 ஐபிஎல் ஏலத்தில் தந்தை - மகன்
2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் பங்குபெறுவதற்காக 939 இந்திய வீரர்கள், 17 நாடுகளைச் சேர்ந்த 281 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1220 வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இதில், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தந்தையும், மகனும் ஒன்றாக தங்களது பெயரை ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் வேறுயாருமில்லை, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல் ரவுண்டரான முகமது நபி மற்றும் அவரது மகன் ஹசன் இசாக்கீல் ஆகும்.

41 வயதான முகமது நபி, ஏற்கனவே 2017 மற்றும் 2021 காலகட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.
இதன் மூலம், ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவரது 20 வயது மகனான ஹசன் இசாக்கீல், கடந்த செப்டம்பர் மாதமே ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
முகமது நபி தனது அடிப்படை விலையை ரூ.1 கோடியாக நிர்ணயித்துள்ள நிலையில், அவரது மகன் ஹசன் ரூ.75 லட்சம் என்ற குறைந்தபட்ச விலையுடன் ஏலத்தில் நுழைந்துள்ளார்.