டி20 உலகக்கோப்பை! யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டடி அடிக்கும் வீரர்கள்.. இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அணி
டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை ஊதி தள்ளிய ஆப்காஸ்தான் அணி பிரிவு 2ல் உள்ள மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் அந்த அளவுக்கு இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் காட்டடி அடித்தார்கள். நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக, 190/4 என்று ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அதில் 13 பவுண்டரிகள் 11 சிக்சர்களை விளாசியது.
கிட்டத்தட்ட 18 ரன்களை 24 பந்துகளில் அடித்துள்ளது என்றே கூற வேண்டும். மேலும் ரஷீத் கான் நேற்று பவுலிங் வீச வரும்போதே ஸ்காட்லாந்து 37/5 என்று இருந்தது, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் பந்துகளை புரிந்து கொள்வதே கடினமாக இருந்தது.
ஆஃப் பிரேக் வீசுகிறார், கூக்ளி வீசுகிறார், கேரம் பந்து வீசுகிறார். புதிய பந்தில் வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
2012, 2016-ல் டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்குக் காரணமே அந்த அணியின் சிக்சர்கள் அடிக்கும் திறன் தான். அதே வகை சிக்ஸ் ஹிட்டிங், பவுண்டரி ஹிட்டிங் மாதிரியை தங்களுக்குள் சுவீகரித்துள்ளது ஆப்கான் அணி.
நெட் ரன் ரேட்டில் நம்பர் 1 நிலையில் இருக்கும் ஆப்கான் அணியை பிரிவு 2ல் உள்ள இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அசால்டாக எடுத்து கொள்ளாமல் கவனமாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.