அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக ஹாங்காங் சிக்ஸ் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்
afghanistan beat australia won hongkong sixes title: 2026 ஹாங்காங் சிக்ஸர் தொடரின் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2026 ஹாங்காங் சிக்ஸர் தொடர்
2026 ஹாங்காங் சிக்ஸர் தொடர், அக்டோபர் 31 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 1 ஆம் திகதி வரை நடைபெற்றது.
12 அணிகள் பங்குபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், நேற்று அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா, 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ் பிரைனட், 14 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 44 ஓட்டங்களை குவித்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஆப்கானிஸ்தான்
116 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இம்ரான் மேர் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 53 ஓட்டங்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

ஆப்கானிஸ்தான், 5.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக ஹாங்காங் சிக்ஸ் சாம்பியன் பட்டதை கைப்பற்றியுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு 33.22 லட்சமும், இரண்டாவது இடத்தை பிடித்தை அவுஸ்திரேலியாவிற்கு, 18.98 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்று 11வது இடத்தை பிடித்தது.