6 ஓவரில் 148 ஓட்டங்கள்! தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளிய ஆப்கானிஸ்தான்
ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
குல்பதின் 50 ஓட்டங்கள்
மிஷன் சாலை மைதானத்தில் நடந்த 6 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் குவித்தது. குல்பதின் 12 பந்துகளில் 50 ஓட்டங்களும்(5 சிக்ஸர்கள்), கரிம் ஜனத் 11 பந்துகளில் 46 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள்) விளாசினர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 ஓவர்களில் 99 ஓட்டங்களே எடுத்ததால், ஆப்கானிஸ்தான் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜோரிச் வான் ஸ்சால்வ்ய்க் 37 (9) ஓட்டங்களும், ஜோசப் 22 (10) ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
RESULT | AFGHANISTAN WON BY 49 RUNS 🚨
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 7, 2025
AfghanAtalan have put on a terrific all-round performance to beat South Africa by 49 runs and register their second successive victory in the Hong Kong Sixes 2025. 👏#HK6 | #HongKongSixes2025 pic.twitter.com/stoZKj2xam
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |