அமீரக அணியை தவிடுபொடிக்கிய ஆப்கான்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்
ஷார்ஜாவில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்ராஹிம் ஜட்ரான்
ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் குவித்தது. ரஹ்மனுல்லா குர்பாஸ் 40 (38) ஓட்டங்களும், இப்ராஹிம் ஜட்ரான் 48 (35) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அணித்தலைவர் முகமது வசீம் 44 (29) ஓட்டங்களும், ஆசிப் கான் 40 (28) ஓட்டங்களும் எடுத்தனர்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
35 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் அணிதலைவர் இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி நாளை நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |