என் தாயை இழந்ததால் என் குடும்பம் வேதனையில் உள்ளது..இந்த வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - ஆப்கான் கேப்டன் உருக்கம்
நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றியை தனது குடும்பத்திற்கு அர்ப்பணிப்பதாக ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்மதுல்லா ஷாஹிடி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி
லக்னோவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிடி பொறுப்பாக விளையாடி 64 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Arun SANKAR / AFP
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத்தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ஹஸ்மதுல்லா, இந்த வெற்றியானது தனக்கும், தன் நாட்டிற்கும் மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்டார்.
Twitter (@ACBofficials)
மேலும் பேசிய அவர், 'அரையிறுதிக்கு முன்னேற எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். அப்படி செய்தால் அது எங்களுக்கு பெரிய சாதனையாக இருக்கும். நான் மூன்று மாதங்களுக்கு முன்பு என் தாயை இழந்தேன், அதனால் என் குடும்பம் வேதனையில் உள்ளது, எனவே இது முதலில் எங்கள் நாட்டிற்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும்.
நான் ஒரு தகவலை கூற விரும்புகிறேன் - எங்கள் அகதிகள் நிறைய பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். நாம் அனைவரும் அவர்களின் வீடியோக்களைப் பார்க்கிறோம், அவர்களின் வலியை உணர்கிறோம். இந்த வெற்றியை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
IANS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |