டோனியின் அரிய சாதனையை முறியடித்த ஆப்கான் அணித்தலைவர்
அதிக டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்ற அணித்தலைவராக டோனி படைத்த அரிய சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் அஃப்கன் முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, உலகின் தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.
அணித்தலைவராக பல தொடர் வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தவர். ஓய்வு பெறுவதற்கு முன், டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
டோனி இந்தியாவை 72 போட்டிகளில் வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். இது அவரை சக்ஸஸ்புல் கேப்டனாக நிலை நிறுத்தியது. ஆனால் அதிகப் பிரபலம் இல்லாத ஒருவர் டோனியின் இந்த மகத்தான சாதனை தற்போது முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அஸ்கர் அஃப்கன் தனது அணியை 42 போட்டிகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இதன் மூலம் டோனியின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார். டோனி மொத்தம் 72 போட்டிகளில் அணியை வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத்தந்தார். ஆனால் அஸ்கர் அஃப்கன் 52வது போட்டியிலேயே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.
டோனியின் வெற்றி சதவிகிதம் 60 ஆக உள்ளது. அதே நேரத்தில் அஸ்கர் அஃப்கனின் வெற்றி சதவிகிதம் 80க்கும் மேல் உள்ளது. 3வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 33 வெற்றிகளுடன் உள்ளார்.
பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 29 வெற்றிகளுடன் 4ம் இடத்திலும்,
மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி 27 வெற்றிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.