பிரான்ஸ் இராணுவத்துக்கு நாங்கள் உதவினோம்... இப்போது எங்களுக்கு உதவக்கூடாதா: ஆப்கனில் அநாதரவாக விடப்பட்டுள்ள ஒரு கூட்டம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் நாட்டவர்களையும், அபாயத்திலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும் அங்கிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கின.
ஆனால், தாலிபான்களின் கெடுவைத் தொடர்ந்து அவை ஆகத்து 31உடன் தங்கள் மீட்புப்பணியை முடித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின.
அதனால், நாட்டை விட்டு வெளியேற விரும்பிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் பலரால் அங்கிருந்து வெளியேற இயலாமல் போயிற்று.
அப்படி வெளியேற முடியாமல் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியுள்ளவர்களில், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான 20 ஆண்டு கால போரில் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உதவியவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், பிரான்ஸ் இராணுவத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், தங்களுக்கு பிரான்ஸ் இராணுவம் உதவவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் இராணுவத்துக்கு நாங்கள் உதவினோம், இப்போது அவர்கள் எங்களுக்கு உதவக்கூடாதா என்கிறார்கள் அந்த மொழிபெயர்ப்பாளர்கள்.