அரசியல் தலைவர் ஃபராஜ் மீது கொலை மிரட்டல்... வெளிநாட்டவர் ஒருவருக்கு சிறை
Reform UK கட்சியின் தலைவர் நைகல் ஃபராஜ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொலை மிரட்டல்
2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட டிக்டோக் வீடியோவில் ஃபராஜ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக லண்டனின் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஃபயாஸ் கான் மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த டிக்டோக் காணொளியில் ஸ்வீடனில் இருந்து பிரித்தானியாவிற்கான பயணம் தொடர்பில் ஃபயாஸ் கான் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வழக்கில், ஃப்ராஜ் வெளியிட்டுள்ள கருத்து ஒன்றிற்காக ஃபயாஸ் கான் பதிலளித்திருந்தாதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபயாஸ் கானின் மிரட்டலில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் ஃபராஜ் நீதிமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளார். ஆனால், தமது காணொளி உண்மையில் அச்சுறுத்தும் வகையில் இருக்கவில்லை என ஃபயாஸ் கான் மறுத்துள்ளார்.
எனது வாழ்க்கையை
கொலை மிரட்டல் விடுத்ததற்காக கானுக்கு நீதிபதி கரேன் ஸ்டெய்ன் தண்டனை விதித்தபோது, ஃபராஜ் பொது கேலரியில் அமர்ந்திருந்தார். மேலும், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததாகமுன்வைக்கப்பட்ட தனி குற்றச்சாட்டில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், பிரித்தானியாவின் பிரதமராக ஆசைப்படும் நீ, எனது வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டாய் என ஃப்ராஜ் நோக்கி கான் சத்தமிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு வெளியே, கானின் தண்டனையில் தான் திருப்தியடைவதாக குறிப்பிட்ட ஃப்ராஜ், ஆனால் விரைவில் அவர் விடுவிக்கப்படலாம் என்ற கவலை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |