ஜேர்மனி அளிக்க முன்வந்த நிதி உதவியை நிராகரித்த ஆப்கன் அகதிகள்: பின்னணி
ஜேர்மனி அளிக்க முன்வந்த நிதி உதவியை ஆப்கன் அகதிகள் நிராகரித்துள்ளனர்.
நிதி உதவியை நிராகரித்த ஆப்கன் அகதிகள்
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்த ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.

அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர்.
ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது ஜேர்மனி.
The German government has sent letters to Afghans offering financial support if they give up plans to immigrate to Germany - a move that has been sharply criticized by recipientshttps://t.co/pINTbRaE6S
— dpa news agency (@dpa_intl) November 4, 2025
ஏற்கனவே ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகியுள்ள நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயங்குகிறது.
ஆகவே, வாக்களித்தபடி அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவருவதற்கு பதிலாக, அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, அவர்களை பாகிஸ்தானிலேயே குடியமருமாறு கேட்டுக்கொண்டுள்ளது ஜேர்மனி.
இந்த திட்டத்தால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் ஆப்கன் நாட்டவர்கள், அந்த திட்டம் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளதுடன், அந்த திட்டத்தையும் நிராகரித்துள்ளார்கள்.
ஆப்கன் நாட்டவர்கள் சிலர் ஜேர்மன் அரசுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |