மக்கள் கூட்டத்தின்மீது காரை மோதிய புலம்பெயர்ந்தோர் கைது
பண்டிகைக் காலங்கள் வந்துவிட்டாலே, சில நாடுகளின் மக்கள் கூட்டத்தின் மீது வாகனங்களை வேண்டுமென்றே மோதும் விடயம் நடப்பது வழக்கமாகிவிட்டது, குறிப்பாக ஜேர்மனியில்!
மக்கள் கூட்டத்தின்மீது காரை மோதிய புலம்பெயர்ந்தோர்
நேற்று, திங்கட்கிழமை, ஜேர்மனியின் Giessen நகரில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது காரைக் கொண்டு மோதியுள்ளார்.

அந்த சம்பவத்தில் நான்கு பேர் வரை காயமடைந்துள்ளார்கள். மக்கள் மீது காரை மோதிய 32 வயது நபர், அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
விடயம் என்னவென்றால், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது காரை மோதுவதற்கு முன், வேறு இரண்டு வாகனங்கள் மீதும் காரைக் கொண்டுமோதியுள்ளார் அவர்.
மக்கள் கூட்டத்தில் காரை செலுத்திவிட்டு, சற்று தொலைவு சென்றபிறகே அவர் காரை நிறுத்தியுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வேண்டுமென்றேதான் மக்கள் கூட்டத்தின்மீது காரை செலுத்தினாரா என்பது குறித்து பொலிசார் எதுவும் கூற மறுத்துவிட்டார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |