முக்கிய திட்டம ரத்து! துயரத்தில் வாடும் மாணவர்களுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்திய பிரித்தானியாவின் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்த ஆண்டு பிரித்தானியாவில் படிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்த அறிவிப்பால் ஏற்கனவே உள்நாட்டு பிரச்சினையால் துயரத்தல் வாடும் ஆப்கான் மாணவர்களிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Chevening ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்ட ஆப்கான் மாணவர்கள், அடுத்த மாதம் முதல் பிரித்தானியாவில் படிப்பை தொடங்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்துள்ளதால், இந்த ஆண்டு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்ட ஆப்கான் மாணவர்களுக்கான விசா வழங்கும் பணிகளை காபூலில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தால் முடிக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Deeply disappointing to hear - on top of everything - that Afghans who received Scholarships from the UK government to study in the UK this year have now been told they will not be granted visas due to "administration issues". Surely someone can sort this out? pic.twitter.com/5Z5dgqLKJC
— Rory Stewart (@RoryStewartUK) August 14, 2021
எனினும், இந்த ஆண்டு ஸ்காலர்ஷிப் பெற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு தங்கள் திட்டத்தை தொடங்க முடியும் என்று வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த ஆண்டு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 35 ஆப்கானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதில் பாதிக்கும் குறைவானவர்கள் பெண்கள் என பாதிக்கப்பட்ட ஆப்கான் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் Chevening ஸ்காலர்ஷிப் திட்டம், உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் பிரித்தானியாவில் ஒரு வருட முதுகலை பட்டப்படிப்பைத் தொடர உதவுகிறது.
முன்னாள் கன்சர்வேடிவ் அமைச்சரவை அமைச்சர் டேவிட் லிடிங்டன், இந்த முடிவு தார்மீக ரீதியாக தவறானது மற்றும் பிரித்தானியா நலன்களுக்கு எதிரானது என்று ட்விட்டரில் கூறினார்.
முன்னாள் சர்வதேச வளர்ச்சி செயலாளர் ரோரி ஸ்டீவர்ட், விசாக்களை வழங்க முடியாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றார்.