இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் மழை குறுக்கீடு: முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிப்பு
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை குறுக்கீடு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இறுதியில் முடிவு எதுவும் எட்டப்படாமல் கைவிடப்பட்டது.
இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகெல்லேவில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் களத்தில் இறங்கியது.
முந்தைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இப்ராகிம் ஜட்ரான் வெறும் 10 ஓட்டங்களில் லஹிரு குமரா பந்துவீச்சில் வெளியேறி ஆப்கான் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
GettyImages
ஆனால், குர்பாஸ் மற்றும் ரஹ்மத் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி 113 ஓட்டங்கள் சேர்த்தது. அரைசதம் விளாசிய குர்பாஸ் 68 ஓட்டங்களில் தனஞ்செய் டி சில்வா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ரஹ்மத் 58 ஓட்டங்களில் தீக்ஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த நஜிபுல்லா, குல்புதின் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர். கேப்டன் ஷாஹிடி 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் லக்ஷனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
AFP/Getty Images
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
இலங்கையின் அபார பந்துவீச்சு
ஆப்கானிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய முகமது நபி மட்டும் ஒருபுறம் தாக்குபிடிக்க, அவரும் ரஜிதா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Sri Lanka team-இலங்கை அணி(Reuters)
இலங்கை அணி வீசிய கடைசி 15 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டது.
இலங்கை சார்பில் ரஜிதா 3 விக்கெட்டுகளையும், தீக்ஷணா மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மழையால் ரத்து
229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது, 2.4 ஓவர்கள் வரை வீசப்பட்டு 10 ஓட்டங்கள் இலங்கை அணி குவித்து இருந்த போது மழை குறுக்கிட்டது.
Memorable clicks from 2nd ODI Afghanistan vs Sri Lanka at Pallekele International Cricket Stadium, Kandy?️ ????#SLvAFG #AFGvSL #SLNews #Lka #SriLanka #Afghanistan #Cricket pic.twitter.com/IR8G8l4clF
— News Cutter (@news_cutter) November 27, 2022
மழை விடாமல் தொடர்ந்து பெய்து வந்ததால் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் கைவிடப்பட்டுள்ளது.