349 ஓட்டங்கள் குவித்தும்.,ஆப்கானிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி DLS முறையில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ 349 ஓட்டங்கள்
இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி தம்புள்ளையில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா ஏ அணி 349 ஓட்டங்கள் குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 84 ஓட்டங்களும், திலக் வர்மா 66 ஓட்டங்களும் எடுத்தனர். அப்துல்லா அஹ்மத்சாய் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதனால் DLS விதிப்படி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
70 பந்துகளில் 75 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசிய அணித்தலைவர் இம்ரான் மிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |