ஆசியக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்! ரஷீத் கான் கூறிய விடயம்
அபுதாபியில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 188 ஓட்டங்கள் குவித்தது. அடல் 73 ஓட்டங்களும், ஓமர்சாய் 53 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஹாங் காங் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தமது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சிறந்த முயற்சி
அதிகபட்சமாக பாபர் ஹயாத் (Babar Hayat) 39 (43) ஓட்டங்களும், யாசிம் 16 ஓட்டங்களும் எடுத்தனர். பரூக்கி மற்றும் நைப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
வெற்றி குறித்து பேசிய ரஷீத் கான் (Rashid Khan), "இது அருமையான போட்டியாக இருந்தது. நல்ல ஸ்கோரை குவிப்பது நல்லது.
கடைசி கட்ட ஓவர்களில் துடுப்பாட்டம் செய்வது ஒரு சிறந்த முயற்சி. குறிப்பாக ஓமர்சாய். எங்களிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இது எதிரணியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |