ஜப்பானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அணி: அராப் மிரட்டல் பந்துவீச்சு
Afghanistan beat japan team by 48 runs: ஆசிய போட்டிகள் டி20யில் ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.
ஜப்பான் அணிக்கு எதிரான ஆசிய போட்டிகள் டி20யில், ஆப்கானிஸ்தான் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அக்ரம், ரசூலி
ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய போட்டிகள் டி20 நிஸ்ஷினில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது.
மொஹம்மது அக்ரம் 34 (29) ஓட்டங்களும், அணித்தலைவர் தார்விஷ் ரசூலி (Darwish Rasooli) 29 (27) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஜப்பான் அணி 19.3 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரியோ சகுரானோ 23 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய அராப் குல் மொமன்த் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளும், நங்கேயாலியா 3 விக்கெட்டுகளும், அப்துல்லா அஹ்மதஸி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
