உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்
டி20 உலகக் கோப்பையின் லீக் நிலை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.
கினியாவை 7 விக்கெட்களில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
முதலில் துடுப்பெடுத்து ஆடிய பப்புவா நியூ கினியா, பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் பாதியை இழந்த பிறகு - 30/5 என்ற நிலையில் - 95 ஓட்டங்களுக்கு தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.
96 எனும் எளிய இலக்கை வைத்து ஆட்டத்தில் இறங்கிய இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரில் குர்பாஸ் 11 ஓட்டங்களும் இப்ராஹிம் சத்ரான் ஏதும் இல்லாமல் தோல்வியடைந்தார்.
இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளால் ஆட்டமிழந்த பிறகும் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி நிலைத்து நின்றது.
அடுத்து வந்த குல்பதின் நயிப் 49 ஓட்டங்களையும் ஓமர்சாய் 13 ஓட்டங்களையும் முகமது நபி 16 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் C பிரிவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றக்கு முன்னேறியுள்ளன.
பப்புவா நியூ கினியா, உகாண்டா, நியூசிலாந்து ஆகிய 3 மணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |