ஆப்கானிஸ்தானால் இந்தியாவை வீழத்த முடியும்! ஹமீத் ஹாசன் உறுதி
நல்ல ரன்களை எடுத்தால் ஆப்கானிஸ்தானால் இந்தியாவை வீழ்த்த முடியும் என ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஹமீத் ஹாசன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இன்று அபுதாபியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் ஹமீத் ஹாசன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தால், முதலில் பேட்டிங் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டியது மிக முக்கியம்.
இந்தியாவை வீழ்த்த எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து நல்ல ரன்களை அடித்தால், இந்திய அணியை பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம் வீழ்த்தலாம் என ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆடுகளத்தை பொறுத்து தான் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தவது இருக்கும்.
சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்ற முழு திறமையை வெளிப்படுத்துவோம்.
அரையிறுதியில் நுழைய ஒவ்வொரு போட்டியையும் வெல்ல ஆப்கானிஸ்தான் அணி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி ஒரு சிறந்த அணியாக மாறியுள்ளது, எங்கள் அணியில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சளார்கள் இருக்கின்றனர். தற்போது இது ஒரு முழுமையான அணியாக இருக்கிறது.
ஒபனிங் பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர், சில சமயம் போராடுகின்றனர். ஆனால் அணியின் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என ஹமீத் ஹாசன் தெரிவித்துள்ளார்.