இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்! பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான்..வைரலாகும் வீடியோ
இலங்கைக்கு வாழ்த்து கூறி பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்
காபூல் நகரின் வீதிகளில் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இலங்கை அணியின் வெற்றியை விட பாகிஸ்தானின் தோல்வி ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அந்நாட்டு ரசிகர்கள் காபூல் நகரின் வீதிகளில் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.
மேலும், சமூக வலைதளங்களில் தங்களை மகிழ்ச்சி அடைய செய்த இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் இந்த செயலுக்கு காரணம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி தான்.
#Afghans ?? Celebrations in Capital #Kabul , #Afghanistan to celebrate Sri Lanka's victory over Pakistan in the #AsiaCup2022Final . pic.twitter.com/8ZnFkN5aKv
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) September 11, 2022
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் போராடி ஆப்கானிஸ்தான் தோற்றபோது, இரு நாட்டு ரசிகர்களும் கேலரியில் மோதிக்கொண்டனர். இதனால் பாகிஸ்தான் அணி மீது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தோல்வியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
PC: Getty Images