இது நல்லது அல்ல! பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் ரசிகர்களுக்கு ஆப்கான் கேப்டன் முகமது நபி விடுத்துள்ள வேண்டுகோள்
ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியை காண டிக்கெட் இன்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் துபாய் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. ஆனால், டிக்கெட் இன்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட குழப்பத்தால் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலர் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு மீதமுள்ள போட்டிகளை ரசிகர்கள் டிக்கெட் வாங்கி பார்க்குமாறு கோரியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ரசிகர்ளே, தயவுசெய்து டிக்கெட் வாங்கி விட்டு மைதானத்திற்கு வாருங்கள், மீண்டும் இப்படி செய்யாதீர்கள். இது நல்லது அல்ல என முகமது நபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.