இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசிய ஆப்கான் வீரர்!
பல்லேகெல்லேவில் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜட்ரான் சதம் விளாசினார்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பல்லேகெல்லேவில் தொடங்கியது.
இப்ராஹிம் ஜட்ரான்
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் அபாரமாக விளையாடி 120 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
மேலும் குர்பாஸ் 53 ஓட்டங்களும், ரஹ்மத் 52 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ரஜிதா, லக்ஷன், லஹிரு குமாரா, தீக்ஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி களமிறங்கி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
ஆப்கான் வீரர் இம்ரஹிம் ஜட்ரானுக்கு இது இரண்டாவது சதம் ஆகும். மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 260 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
Second hundred in his sixth ODI ?
— ICC (@ICC) November 25, 2022
A brilliant knock from Ibrahim Zadran! ?
Watch the #SLvAFG series on https://t.co/CPDKNx77KV (in select regions) ? pic.twitter.com/KGpbM7AE56
@ACBofficials