முதல் சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாடப்போகும் அணி: எங்கள் ஜாம்பவானுக்கு இறுதிப்போட்டி என பதிவு
ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் சாம்பியன்ஸ் டிராஃபியில் தொடரில் விளையாட உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முதல் சாம்பியன்ஸ் டிராஃபி
பாகிஸ்தான் மற்றும் துபாயில் 19ஆம் திகதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தொடங்குகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராஃபியில் களமிறங்குகிறது.
ஹஸ்மதுல்லா ஷஹிதி தலைமையில் ரஷித் கான், ரஹ்மனுல்லா குர்பாஸ், முகமது நபி, ஓமர்சாய் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஆப்கான் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான ஓமர்சாய் (Omarzai) சமீபத்திய வெற்றிகளுக்கு முக்கிய தூணாக இருந்து வருகிறார்.
4 Days to the Champions Trophy 🏆
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 15, 2025
The ICC Champions Trophy 2025 will mark the final appearance of @MohammadNabi007 in ODI cricket. He has been a true legend and has made significant contributions to the growth of the game in Afghanistan. Relive his outstanding batting… pic.twitter.com/iU0syEzf2K
மேலும், 2024யின் சிறந்த வீரர் எனும் ஐசிசி விருதை வென்றதால், இந்த தொடரில் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது நபிக்கு கடைசி போட்டி
இந்த நிலையில், ஆப்கானின் மூத்த வீரர் முகமது நபிக்கு (Mohammad Nabi) இது கடைசி தொடராக இருக்கும் என அணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்கான் அணி வெளியிட்ட பதிவில், "நபி ஒரு உண்மையான ஜாம்பவான் மற்றும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். கடந்த நவம்பரில் நடந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான அவரது சிறந்த துடுப்பாட்ட செயல்திறனை மீண்டும் நினைவு கூறுகிறோம்" என பதிவிட்டுள்ளது.
40 வயதாகும் முகமது நபி 170 போட்டிகளில் 3,606 ஓட்டங்களுடன் 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 131 டி20 போட்டிகளில் 2,237 ஓட்டங்களுடன் 97 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் 26 வயதில், ஒருநாள் போட்டியில் 198 விக்கெட்டுகளையும், டி20யில் 161 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ரஷித் கான் இம்முறையும் மேஜிக் காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்நோக்குகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |