டி20 உலகக்கிண்ண வரலாற்றில் படுமோசமான சாதனையை செய்த ஆப்கானிஸ்தான்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மோசமான சாதனையை செய்தது.
56 ஓட்டங்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான்
டிரினிடாட்டில் நடந்த டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.5 ஓவரில் 56 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் டி20 உலகக்கிண்ண வரலாற்றில், அரையிறுதியில் குறைந்த ஸ்கோரில் ஆல்அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் செய்துள்ளது.
இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 101 ஓட்டங்களுக்கு சுருண்டதே குறைந்த ஸ்கோராக இருந்தது.
![முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா! ஆப்கானை 56 ரன்னுக்கு சுருட்டி இமாலய வெற்றி](https://cdn.ibcstack.com/article/04853969-175a-4e1e-a102-a80b680e3005/24-667cd30ba304e-sm.webp)
முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா! ஆப்கானை 56 ரன்னுக்கு சுருட்டி இமாலய வெற்றி
நாக்அவுட் சுற்றுகளில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள்:
- ஆப்கானிஸ்தான் - 56 (2024)
- மேற்கிந்திய தீவுகள் - 101 (2009)
- இலங்கை - 101 (2012)
- பாகிஸ்தான் - 123/7 (2012)
- இலங்கை - 128/6 (2010)