ஆப்கானிஸ்தானின் முகேஷ் அம்பானி... கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்: அவர் சொத்து மதிப்பு
ஆப்கானிஸ்தானை சேர்ந்த மிர்வைஸ் அஸிஸி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இயங்கும் பெரும் கோடீஸ்வரர்.
அமெரிக்க பல்கலைக்கழகம்
அஸிஸி குழுமத்தின் தலைவரான இவர் கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பவர். இதனாலையே, ஆப்கான் இளைஞர்களுக்காக ஆப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தை உருவாக்கினார்.
அஸிஸி 1989ல் தொழில் துறையில் களமிறங்கியுள்ளார். ரியல் எஸ்டேட், வங்கி, முதலீடு மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அஸிஸி குழுமம் தற்போது முன்னிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வணிக வங்கியான அஸிஸி வங்கியின் தலைவராக உள்ளார் மிர்வைஸ் அஸிஸி. 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்கு மூலதனத்துடன் 2006ல் அஸிஸியால் நிறுவப்பட்டது. தற்போது இந்த வங்கியின் பங்கு மூலதனம் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
மதிப்பு 45 பில்லியன் திர்ஹாம்
ஆப்கானிஸ்தானில் விற்கப்படும் பெட்ரோலியப் பொருட்களில் 70% அளவுக்கு அஸிஸி குழுமத்தால் முன்னெடுக்கப்படுகிறது. காபூல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பின்னர் 1988ல் வேலை தேடி துபாய் சென்றுள்ளார்.
2006ல் அஸிஸி வங்கியும் 2007ல் அஸிஸி கட்டுமான நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். அஸிஸி கட்டுமான நிறுவனம் துபாய் முழுவதும் புதிதாக 200 கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மொத்த மதிப்பு 45 பில்லியன் திர்ஹாம் என்றே கூறப்படுகிறது. மேலும், மிர்வைஸ் அஸிஸியின் மொத்த சொத்து மதிப்பு என்பது சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |