2024 ஆசியக் கோப்பை டி20: இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
2024 ஆசியக் கோப்பை டி20 தொடரில், இந்தியா ஏ அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதல்
2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு 207 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.
Sediqullah hit two birds with ZERO stones! ⚡@ACBofficials #MensT20EmergingTeamsAsiaCup2024 #INDvAFG #ACC pic.twitter.com/MNdGmFiNgb
— AsianCricketCouncil (@ACCMedia1) October 25, 2024
ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்கள் குவித்தது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானின் அதிரடிக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணியில் ரமன்தீப் சிங் மட்டும் 64 ஓட்டங்கள் எடுத்து போராடினார்.
Men's T20 Emerging Teams Asia Cup:
— ?????? (@Shebas_10dulkar) October 25, 2024
INDA Team under Tilak Varma Lost in Semifinals against Afghanistan ?
Ramandeep Singh Played a Lone Warrior Knock (64 runs off 34 ball) ??
SL & AFG Will Face each other in Finals on Sunday! pic.twitter.com/cg3M7ifKli
இதன் மூலம் இந்திய அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இறுதிப் போட்டி அக்டோபர் 27 அன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |