மாயாஜால சுழலில் ஆப்கானிஸ்தானை சுருட்டிய இலங்கை வீரர்கள்! 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
இலங்கை அணி வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பழி தீர்த்தது.
இலங்கை 323 ஓட்டங்கள் குவிப்பு
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹம்பன்டோடவில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 78 ஓட்டங்களும், திமுத் கருணரத்னே 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
?? Sri Lanka roars back to form with a stunning victory over ?? Afghanistan, winning by a massive 132 runs! ?? #SLvAFG pic.twitter.com/MYx1Vn2SlJ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 4, 2023
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 2 ஓட்டங்களில் சமீரா பந்துவீச்சில் அவுட் ஆனார். எனினும் இப்ராஹிம் ஜட்ரான், ரஹ்மத் ஷா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தனஞ்செய டி சில்வா மிரட்டல்
இவர்களது கூட்டணியை தனஞ்செய டி சில்வா பிரித்தார். அவரது பந்துவீச்சில் 36 ஓட்டங்களில் ரஹ்மத் ஷா வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ஷாஹிடி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இதற்கிடையில் அரைசதம் அடித்த இப்ராஹிம் ஜட்ரானை 54 ஓட்டங்களில் தனஞ்செய டி சில்வா ஆட்டமிழக்க செய்தார்.
பின்னர் வந்த நஜிபுல்லாவையும் அவரே அவுட்டாக்கினார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தனது சுழற்பந்து வீச்சில் ஹசரங்கா சரித்தார்.
இமாலய வெற்றி
ஓமர்சாய் மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ஆப்கானிஸ்தான் அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கடைசி விக்கெட்டாக அவுட் ஆன ஓமர்சாய் 31 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா தலா 3 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.