79 ஓட்டங்களில் சுருண்ட ஜிம்பாப்வே: டி20 தொடரில் வாஷ்அவுட் செய்த ஆப்கானிஸ்தான் அணி
Afghanistan washout zimbabwe in t20 series: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
சுருண்ட ஜிம்பாப்வே
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 14.3 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரியான் பர்ல் 5 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
நூர் அகமது 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளும், அப்துல்லா தாரக்ஹைல் 2 விக்கெட்டுகளும், பரூக்கி, ஓமர்சாய் மற்றும் அஹ்மத்சாய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 8.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஓமர்சாய் தொடர் நாயகன்
இப்ராஹிம் ஜட்ரான் 25 (17) ஓட்டங்களும், செதிகுல்லா அடல் 20 (14) ஓட்டங்களும், ஓமர்சாய் 18 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நூர் அகமது ஆட்டநாயகன் விருதும், அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
