ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்
அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெல்ஃபாஸ்டில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ஒயிட் வாஷ் செய்தது.
கார்டிஸ் கேம்பர் 96
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து அணியில் கார்டிஸ் கேம்பர் (Cutis Campher) 96 (84) ஓட்டங்கள் விளாசினார். ஹாரி டெக்டர் 53 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ஓட்டங்கள் குவித்தது. ஓமர்சாய் 3 விக்கெட்டுகளும், கஸன்ஃபர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ரஷீத் கான் தொடர் நாயகன்
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 302 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ரஹ்மத் ஷா (Rahmat Shah) ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 13 பவுண்டரிகள்) விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று, அயர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருதும், ரஷீத் கான் (Rashid Khan) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |