நாங்கள் மீண்டும் வர்றோம் இந்தியா! ஆப்கானிஸ்தான் அணியை வரவேற்கும் ரசிகர்கள்
இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி ஜனவரி மாதம் வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக விளையாடி அணி ஆப்கானிஸ்தான். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என ஆப்கானிஸ்தான் பெற்ற 4 வெற்றிகளும் பெரிய அணிகளுக்கு எதிராகத் தான்.
இதனால் இந்திய ரசிகர்களே ஆப்கானிஸ்தானின் ஃபேன்ஸ் ஆக மாறினர். மேலும் அந்த அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.
அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனாலும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்திய ரசிகர்களுக்கு நன்றி கூறியதும், பதிலும் ரசிகர்கள் வாழ்த்தியதும் நெகிழ்ச்சி தருணமாக இருந்தது.
AFP
டி20 தொடர்
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் இந்தியா வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஜனவரி 11ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
X/Twitter
முதல் போட்டி 11ஆம் திகதியும், 2வது போட்டி 14ஆம் திகதியும், கடைசி போட்டி 17ஆம் திகதியும் நடக்கின்றன. எனினும் போட்டி மைதானங்கள் குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ''இந்தியா, நாங்கள் மீண்டும் வருகிறோம்'' என குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து கூறி வரவேற்று பதில் அளித்து வருகின்றனர்.
?????, ?? ??? ?????? ????? ?
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 21, 2023
AfghanAtalan are all set to meet Team India in a three-match T20I series in early January next year. ?
More ?: https://t.co/xQmpQtNWuR pic.twitter.com/BpITUbzM3W
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |