எலான் மஸ்க்கை விட அதிக சொத்து வைத்திருந்தவர்! தங்கத்தையும், உப்பையும் வைத்து மட்டுமே வருமானம்
800 ஆண்டுகளுக்கு முன்பே உலக பணக்காரர்களின் சொத்தை விட அதிக சொத்து வைத்திருந்த ஆப்பிரிக்க மன்னரை பற்றி பார்க்கலாம்.
யார் இந்த மன்னர்?
ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்களின் சொத்துக்கணக்கை பட்டியலிடுவதன் படி, இந்த ஆண்டு உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 234 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய்.
அந்த வரிசையில், அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாஃப்ட் முன்னாள் சி.ஓ பில்கேட்ஸ், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர். ஆனால், இவர்களது சொத்தை விட அதிகமான சொத்தை ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மன்னர் ஒருவர் வைத்திருந்தார்.
அவர் தான், 14 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டை ஆண்ட பேரரசர் மான்சா மூசா. இவருடைய சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம் கோடி ரூபாய்.
தேடி வந்தால் தங்கம்
1280 -ம் ஆண்டு மான்சா மூசா பிறந்தார். இவருக்கு 1312 -ம் ஆண்டு மேற்கு ஆப்பரிக்காவில் இருக்கும் வாஸ்ட் மாலி என்ற நாட்டின் அரசாராக முடிசூட்டப்பட்டது. இவர், திம்புக்டு வாசா என்ற நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார். இவருடைய முக்கிய வருமானமே தங்கத்தையும், உப்பையும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைப்பது தான்.
இவர், 1324 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு யாத்திரை மேற்கொண்டார். இவருடைய யாத்திரை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சஹாரா பாலைவனத்திற்கு சென்ற வாகனத்தில் இன்றுவரை பெரிய வாகனம் இவருடையது தான் எனக் கூறப்படுகிறது.
இவர் இந்த பயணத்தின் போது, 100 -க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள், ஏராளமான தங்கம், பணிவிடை செய்ய 12 ஆயிரம் வேலைக்காரர்கள், மற்றும் தன்னுடன் 8,000 பேர் உடன் சென்றுள்ளார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் மூசா தான் என கூறப்படுகிறது. குறிப்பாக, இவரை தேடி வருபவர்களுக்கு எல்லாம் தங்க கட்டிகளை தானமாக வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |