எல்லாம் சாதித்துவிட்டேன் என கோலி நினைக்கிறாரா? கடுமையாக சாடிய அதிரடி மன்னன் அப்ரிடி
கோலியின் கிரிக்கெட் மீதான பிடிப்பையே கேள்விக்குட்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி.
விராட் கோலியின் கிரிக்கெட் ஆட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பை ஆன கதையாகி விட்டது, சதம் வறண்டது, இப்போது அரைசதமும் வறண்டு போய்விட்டது. மாறாக முதல் பந்தில் டக் அடிப்பது வாடிக்கையாகி வருகிறது.
இது தொடர்பில் பேசிய ஷாகிப் அப்ரிடி, கிரிக்கெட்டில் மனப்பான்மை என்ற ஒன்று உண்டு. நான் இதைப்பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறேன். கிரிக்கெட் அவர் மனதில் இருக்கிறதா இல்லையா? விராட் கோலி முன்பெல்லாம் உலகில் நம்பர் 1 பேட்டராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது.
PTI
ஆனால் இன்னும் அவர் இதே உத்வேகம் மனப்பான்மையுடன் ஆடுகிறாரா? அல்லது தான் எல்லாம் சாதித்து விட்டேன், இனி சாதிக்க ஒன்றுமில்லை, இனிமேல் பொழுதுபோக்குதான் என்று நினைக்கிறாரா? இவை எல்லாமே அவரது மனப்பான்மை அணுகுமுறை பற்றியது.
இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.