18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் சரித்திரம் படைத்த தென் ஆப்பிரிக்கா
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
SA vs Pak
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட், 3 ODI மற்றும் 3 T20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
லாகூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், ராவல்பிண்டியில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இதில், முதலில் ஆடிய பாகிஸ்தான் 333 ஓட்டங்கள் குவித்தது. ஷான் மசூத் 87 ஓட்டங்களும், சக்கீல் 66 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜா 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அதைத்தொடர்ந்து துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 404 ஓட்டங்கள் எடுத்தது. செனுரன் முத்துசாமி 89 ஓட்டங்களும். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) 76 ஓட்டங்களும், ககிஸோ ரபாடா 71 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
71 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ஓட்டங்களும், சல்மான் ஆஹா 28 ஓட்டங்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஹார்மர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
68 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 12.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சம்படுத்தியுள்ளது.
மேலும், 18 வருடங்களுக்கு பாகிஸ்தான் மண்ணில், தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |