30 வயதை தொட்டவர்கள் தெரியாம கூட இந்த 6 விஷயங்களை எடுத்துக்காதீங்க.., எலும்புகள் தேய்ந்து விடுமாம்
30 வயதிற்கு பிறகு எலும்புகளில் தாதுக்கள் குறைவதால் எலும்புகள் தேய்ந்து பலவீனமாக மாறுகின்றன.
எனவே 30 வயதை தாண்டிய பிறகு ஒருவர் தனது எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமானது.
அந்தவகையில் 30 வயதிற்கு மேற்பட்டவர் தங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த 6 விஷயங்களை மறந்தும் கூட எடுத்துக்காதீங்க.
உப்பு மற்றும் சர்க்கரை
உப்பு மற்றும் சர்க்கரை, இவை இரண்டையும் அதிகம் சேர்ப்பது உடலில் இருந்து வெளியேறும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. கால்சியம் குறைபாடு எலும்புகளை பலவீனமாக்கி விடுகிறது.
Shutterstock
காஃபின்
தினமும் குடிக்கும் டீ, காபி, கோகோ பானம் இவற்றில் இருக்கக்கூடிய காஃபின் உடலில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
அதிக அளவு காஃபின், உடலில் எலும்பு தாது இழப்பு, குறைந்த பிஎம்டி மற்றும் குறைந்த கால்சியம் உள்ளடக்கம் உள்ளிட்ட தீவிர எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உட்கார்ந்தே இருப்பது
உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கால்சியத்தை இழக்க செய்கிறது.
எனவே தினசரி நடைபயிற்சி, ஓடுவது அல்லது வொர்கவுட்கள் போன்ற செயல்பாடுகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
விலங்கு புரதம்
மீன், கோழி, சிவப்பு இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு புரதங்களை அதிகம் உட்கொள்ள கூடாது.
விலங்கு புரதங்களின் அதிக நுகர்வு எலும்புகளில் இருந்து கால்சியத்தை சிறுநீர் வழியே வெளியேற்றி விடும்.
சாஃப்ட் டிரிங்ஸ்
குளிர்பானங்கள் அதிகம் குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பது கண்டிப்பாக எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய பழக்கம் ஆகும்.
இவற்றில் இருக்கும் சர்க்கரை, காஃபின் மற்றும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கால்சியத்தை வெளியேற்றுகின்றன.
புகை பழக்கம்
30 வயதை கடந்த ஒருவர் புகை பழக்கத்தை கொண்டிருந்தால் அது அவரது எலும்பு ஆரோக்கியத்தையும் சேர்த்து தான் பாதிக்கும்.
இதிலிருக்கும் நிகோடின் உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |