40 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி செல்லும் இந்தியர் - யார் இந்த சுபான்சு சுக்லா?
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2023 ஆம் ஆண்டு உலகின் முதல் நாடாக, நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து, 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு தனி சர்வதேச விண்வெளி மையம், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது போன்ற திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது.
40 ஆண்டுகளுக்கு பின்னர்..
இதில் ககன்யான் திட்டத்தில், நிலவுக்கு அனுப்ப 4 இந்தியர்களை இஸ்ரோ தேர்வு செய்தது. அந்த நால்வரில் சுபான்சு சுக்லா(Shubhanshu Shukla) ஒருவர்.
இதற்காக கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் வரும் மே மாதம் ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா அனுப்புகிறது.
இந்த நால்வரில் ஒருவராக, சுபான்சு சுக்லாவும்(40) விண்வெளிக்கு செல்ல உள்ளார். அவருடன் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளை சேர்ந்த வீரர்களும் பயணிக்க உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார்.
சுபான்சு சுக்லா
முன்னதாக, 1984 ஆம் ஆண்டு சோவியத் சோயுஸ் விண்கலத்தில், இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா, 1985 ஆம் ஆண்டு பைலட்டாக இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.
சுபான்சு சுக்லா, ஏன்-32, டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக்-21, மிக்-29 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்.
விண்வெளிக்கு செல்லும் நால்வரும், 14 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின், பூமிக்கு திரும்ப உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |