56 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா
after 56 years australia face innings defeat in sa: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 56 ஆண்டுகளுக்கு பிறகு இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.
56 ஆண்டுகளுக்கு பிறகு இன்னிங்ஸ் தோல்வி
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 425 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

186 ஓட்டங்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா அணித்தலைவரான டெம்பா பவுமா, 36 வயது மற்றும் 154 நாட்களில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த மிக வயதான அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
அதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, மளமளவென விக்கெட்களை இழந்து, 99 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

326 ஓட்டங்கள் பின்தங்கி இருந்த அவுஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கப்பட்ட நிலையில், 2வது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் போராடி 121 ஓட்டங்கள் குவித்தார்.

அவுஸ்திரேலிய அணி, 295 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை ஃபாலோ-ஆன் செய்த முதல் அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்றது.

மேலும், 56 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக 1970 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.