80 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலக போரின் கப்பல்! மோசமான கடல்சார் பேரழிவு
இரண்டாம் உலகப் போரின் போது 1000 பேரோடு கடலில் மூழ்கிய ஜப்பானிய வணிக கப்பல், சீன கடல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் கப்பல்
கடந்த ஜூலை 1, 1942ல் பிலிப்பைன்ஸ் கடற்கரையில் காணாமல் போன, போர்க் கைதிகளின் இரகசிய போக்குவரத்துக் கப்பலான SS Montevideo Maru என்ற கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Richard Marles) ரிச்சர்ட் மார்லெஸ் அறிவித்துள்ளார்.
@Australian War Memorial
இந்த கப்பல் பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனானுக்கு சென்று கொண்டிருந்தது . அப்போது எதிர்பாராத விதமாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டுள்ளது.
மோசமான கடல்சார் பேரழிவு
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க நீர்முழ்கி கப்பலால் டார்பிடோ செய்யப்பட்ட SS Montevideo Maru என்ற கப்பலில், போர்க் கைதிகள் உட்பட மொத்தம் எண்ணூற்று அறுபத்து நான்கு வீரர்களுடன் மூழ்கியுள்ளது
@telegraph
அவுஸ்திரேலியாவின் 'மோசமான கடல்சார் பேரழிவு' என்று அழைக்கப்படும் தோல்வி ஆகியவை ஆழ்கடல் ஆய்வு மூலம் சீனக் கடல் நிபுணர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கப்பல் மூழ்கியதில் அவுஸ்திரேலியாவின் மிக மோசமான கடல் பேரழிவாகும், குறைந்தது 850 ராணுவ வீரர்கள் உட்பட 979 அவுஸ்திரேலிய குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
@telegraph
மற்ற 13 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களும் கப்பலில் இருந்துள்ளனர், மொத்த கைதிகளின் எண்ணிக்கையை சுமார் 1,060 ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய ராணுவம் அஞ்சலி
வரும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படும் அவுஸ்திரேலியாவின் அன்சாக் தினத்திற்கு சற்று முன்னதாக கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அனைத்து இராணுவ மோதல்களிலும், கொல்லப்பட்ட தங்கள் போர் வீரர்களை நினைவுகூருகின்றன.
"இது அவுஸ்திரேலியாவின் கடல் வரலாற்றில் மிகவும் சோகமான அத்தியாயங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருகிறது" என்று மார்ல்ஸ் காணொளி செய்தியொன்றில் கூறியுள்ளார்.
@telegraph
அரசாங்கத்தின் கூற்றுப்படி, 13,123 அடிக்கும் மேலான ஆழத்தில் சிதைந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடல் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் ஆழ் கடல் ஆய்வு நிபுணர்கள் வழிவகுத்தனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையினரும் தேடுதலுக்கு உதவியுள்ளனர்.