பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு தொடங்கும் நடைபயணம்: அதிமுகவை விமர்சிப்பாரா அண்ணாமலை?
உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்’ நடைபயணம் மீண்டும் இன்று தொடங்கப்படவுள்ளது.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
மீண்டும் தொடக்கம்
இந்நிலையில், அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அக்டோபர் 6 -ம் திகதி கோவை மேட்டுப்பாளையம் பேரவை தொகுதியில், நடைபயணம் தொடங்கவிருந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று கோவை மாவட்டம் அவினாசியில் 'என் மண் என் மக்கள்' நடை பயணத்தை அண்ணாமலை மீண்டும் தொடங்கவுள்ளார். அதை தொடர்ந்து பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதியிலும் நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு தொடங்கும் நடைபயணம் என்பதால், திமுகவை விமர்சித்ததோடு அதிமுகவையும் விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |