அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு
இந்தியாவின் அம்பானி குடும்பத்திற்குப் பிறகு, தாய்லாந்தின் சியரவானோன்ட் குடும்பம் ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பமாக ப்ளூம்பெர்க்கால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தனது சகோதரருடன்
சியரவானோன்ட் குடும்பம் தங்கள் சரோயன் போக்பாண்ட் (CP) குழுமம் மூலம் 42.6 பில்லியன் டொலர் சொத்துக்களை உருவாக்கியுள்ளது. CP குழுமம் என்பது உணவு, சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு, நிதி, சுகாதாரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது.
1921 ஆம் ஆண்டு சீனாவை விட்டு தப்பிச் சென்று தனது சகோதரருடன் தாய்லாந்தில் ஒரு சிறிய கடையைத் தொடங்கிய சியா ஏக் சோரால் என்பவரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.
ஆண்டுகள் செல்ல இவர்களின் தொழில் ஆசியா முழுவதும் விரிவடைந்து, ஒரு முன்னணி வேளாண் வணிக நிறுவனமாக மாறியது. நிறுவனரின் மகனான தனின் சியரவானோன்ட், நிறுவனத்தை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
மிகவும் செல்வாக்கு மிக்க
இவரது தலைமையின் கீழ், CP குழுமம் தாய்லாந்தின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது, 21 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தக் குழுமம் உலகின் முன்னணி கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், மேலும் மின் வணிகம் மற்றும் பிற தொழில்களிலும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
CP குழுமத்தின் பரந்த வணிக சாம்ராஜ்யம் மற்றும் தொடர்ச்சியான விரிவாக்கத்துடன், சீரவனோன்ட் குடும்பம் ஆசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றாக தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |