தாயான பிறகு ஐஏஎஸ் அதிகாரியாக ஆசை.., 4 மணிக்கு எழுந்து படித்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
தாயான பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கிய பெண் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தாயான பிறகு
இந்திய மாநிலமான ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள குஷ்புரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் தனது பள்ளி படிப்பை முடித்த பின்னர் 2016 ஆம் ஆண்டில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, அதைத் தொடர்ந்து முதுகலைப் படிப்பு மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றார்.
பின்பு, 2011 இல் திருமணம் செய்து கொண்டு ஹரியானாவின் மானேசரில் குடியேறினார். திருமணத்திற்கு முன்பு தனியார் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி செய்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத்தில் உதவி மேலாளராக சேர்ந்தார்.
திருமணத்திற்குப் பிறகு வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை புஷ்பலதாவுக்கு வந்தது.
திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வுக்குத் தயாராகத் தொடங்கிய அவர் தனது இரண்டு வயது மகனையும் கவனித்துக் கொண்டார்.
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து பல மணி நேரம் படித்து தனது குடும்பப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டார் புஷ்பலதா.
அதன்படி, மூன்றாவது முயற்சியிலேயே, 2017 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 80-வது இடத்தைப் பிடித்தார். இதற்கு அவரது குடும்பம் அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |