திருப்பி அடிக்கத் தொடங்கிய ட்ரம்ப்... ஜோ பைடனை அடுத்து உயர்மட்ட அதிகாரிகளின் பாதுகாப்புக்கு வேட்டு
ஜோ பைடனுக்குப் பிறகு, அவரது வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் ரத்து
ஜனாதிபதி ஜோ பைடனுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், தினசரி உளவுத்துறை தரவுகளை அணுகும் அனுமதியையும் டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்திருந்தார்.
அத்துடன் ஜோ பைடனின் துணை அட்டர்னி ஜெனரல் லிசா மொனாக்கோவுக்கான பாதுகாப்பையும் ரத்து செய்துள்ளார். இவரே 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களை விசாரிக்க நடவடிக்கை முன்னெடுத்தார்.
மட்டுமின்றி, ட்ரம்பிற்கு எதிரான வழக்குகளுக்கு தலைமை தாங்கிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் மற்றும் மன்ஹாட்டன் மாவட்ட சட்டத்தரணி ஆல்வின் பிராக் ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கான பாதுகாப்பை ரத்து செய்த டொனால்டு ட்ரம்ப், உளவுத்துறை தரவுகளை அறிந்துகொள்ளும் தேவை ஜோ பைடனுக்கு இல்லை என தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.
நம்ப முடியாது
இதன் ஒருபகுதியாக அவருக்கான பாதுகாப்பையும் ரத்து செய்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொதுவாக ஜனாதிபதி பொறுப்பில் இருந்து ஒருவர் வெளியேறியதன் பின்னரும், உளவுத்துறை தரவுகளை அணுகும் உரிமை பாரம்பரியமாக அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோ பைடன் 2020ல் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததும் தமது பாதுகாப்பை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்ட ட்ரம்ப், உளவுத்துறை விவகாரத்திலும் ஜோ பைடனை நம்ப முடியாது என்றார்.
ஆனால், ஜனாதிபதியாக இருக்கும் போதும் ஜனவரி 6ம் திகதி ஆட்சி கவிழ்ப்புக்கு சதி செய்த போதும் ட்ரம்பின் நடவடிக்கைகளே அவரது பாதுகாப்பை ரத்து செய்ய காரணமாக அமைந்தது என அப்போது ஜோ பைடன் விளக்கமளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |