சென்னைக்கு மீண்டும் வரும் தாக்கம் : மழை நின்றாலும் பனிப்பொழிவு ஆரம்பம்
சென்னையில் தொடர்ந்து பெய்த மழையை அடுத்து, தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு மீண்டும் எற்பட்டுள்ள ஆபத்து
சென்னையில் கடந்த நாட்களில் பெய்து வரும் மழை காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும் பலரின் வாழ்வாதாரமானது பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்த மழையானது கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓய்வு பெற்றது. இந்நிலையில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடியாத போது பனிப்பொழிவானது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து வரும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வாகன ஓட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவான் தெளிவு இல்லாமல், வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
சென்னையை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் வீதியிலும் விளக்குகள் இல்லாம் தட்டு தடுமாறி வாகனத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாண பொருட்களை வழங்குவதற்காக வரும் வாகனங்களும் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |