கோஹ்லியைத் தொடர்ந்து ஓய்வுபெறப் போகும் 5 வீரர்கள்: பிசிசிஐ வகுத்துள்ள திட்டம்
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, மேலும் சில வீரர்கள் ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
டெஸ்ட் அணி
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) டெஸ்டில் ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, விராட் கோஹ்லியும் (Virat Kohli) ஓய்வினை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இதன்மூலம் பிசிசிஐ ஒரு இளம் டெஸ்ட் அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரோஹித், கோஹ்லியைத் தொடர்ந்து மேலும் 5 வீரர்கள் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.
ரவீந்திரா ஜடேஜா
தற்போது 36 வயதாகும் ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), 80 டெஸ்ட்களில் (118 இன்னிங்ஸ்) விளையாடிய அனுபமிக்கவர்.
இதுவரை 323 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஜடேஜா, 3370 ஓட்டங்களும் எடுத்துள்ளார். ஆனால், அக்சர் படேல் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்குவதால் ஜடேஜாவை விட இவருக்கு அணியில் அதிக வாய்ப்புள்ளது. எனவே ஜடேஜாவும் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்.
செடேஸ்வர் புஜாரா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 100 டெஸ்ட்களில் விளையாடியுள்ள செடேஸ்வர் புஜாரா (Cheteshwar Pujara) 19 சதங்கள் விளாசியுள்ளார்.
தற்போதைய அணியில் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரராக புஜாரா இருக்கிறார். ஆனால் இவர் களமிறங்கும் 3வது ஸ்பாட்டிற்கு கில், ராகுல் என இளம் வீரர்கள் வரிசைக்கட்டி இருப்பதால், புஜாராவுக்கு அணியில் வாய்ப்புகள் குறையும். எனவே இவரும் ஓய்வுபெற வாய்ப்புள்ளது.
இஷாந்த் ஷர்மா
இஷாந்த் ஷர்மா (Ishant Sharma) இந்திய அணியில் விளையாடி நீண்ட காலமானதால், அவரது இடத்திற்கு பலர் அணிக்கு வந்துவிட்டனர்.
2021ஆம் ஆண்டிற்கு பின் இஷாந்த் விளையாடாததால் இனியும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
இதன் காரணமாக 105 போட்டிகளில் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இஷாந்த் ஷர்மாவும் ஓய்வை அறிவிக்கலாம்.
அஜிங்கயா ரஹானே
நிதானமாக நின்று ஆடி ஓட்டங்கள் சேர்க்கக்கூடியவர் அஜிங்கயா ரஹானே (Ajinkya Rahane). 36 வயதாகும் ரஹானே 85 டெஸ்ட்களில் 12 சதங்களுடன் 5077 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் ரஹானேவின் டெஸ்ட் அனுபவம் அணி வீரர்களுக்கு தேவைதான் என்றாலும்; அவர் அணியில் விளையாட 1 சதவீதம்தான் வாய்ப்புள்ளது. இதனால் அவரும் ஓய்வு பெறலாம்.
புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) கடைசி 3 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடவில்லை. 2018யில் கடைசியாக விளையாடிய இவருக்கு இனி அணியில் களமிறங்க வாய்ப்பே இல்லை என்றே கூறலாம்.
35 வயதாகும் இவர் 21 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இவர் மூன்று வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |