5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி - இலங்கை இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?
சூப்பர் 4 சுற்றின் 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணிக்கு இறுதிபோட்டிக்குள் நுழைய சிறிய வாய்ப்புள்ளது.
2வது தோல்வியை சந்தித்த இலங்கை
ஆசிய கிண்ணம் சூப்பர் 4 சுற்றின் நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 2வது பந்திலேயே குஷால் மெண்டிஸ் ஆட்டமிழக்க அடுத்தது விக்கெட்கள் சரிந்தன. கமிந்து மென்டிஸ் மட்டும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.
இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்களை இழந்து, 133 ஓட்டங்களை எடுத்தது. 134 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
3 ஓவர்கள் வீசி, 2 விக்கெட்களை கைப்பற்றியதோடு, 32 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஹுசைன் தலாத் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பாகிஸ்தான் இந்த வெற்றி மூலம், 2 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் 2வது உள்ளது.
முதல் போட்டியில், வங்கதேசம் மற்றும் 2வது போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இலங்கை அணி புள்ளிகள் எதுவும் இல்லாமல் கடைசி இடத்தில் உள்ளது.
இறுதிப்போட்டிக்கு செல்லுமா இலங்கை?
ஆனால் இன்னும் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு செல்ல சிறிய வாய்ப்பு உள்ளது. அதற்கு, இந்திய அணி இன்று நடைபெற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும், அடுத்ததாக இலங்கை எதிரான போட்டியிலும் தோற்க வேண்டும்.
அதேவேளை, நாளைய போட்டியில், பாகிஸ்தானை வங்கதேச அணி வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால், 6 புள்ளிகளுடன் வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 அணிகளும் 2 புள்ளிகளுடன் இருக்கும். நிகர ரன் ரேட்(NRR) அடிப்படையில், முன்னணியில் உள்ள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |