லண்டனில் பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர்: சுரங்க நிலையத்தில் ரயில் மோதி உயிரிழப்பு
பிரித்தானியாவில் பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர் லண்டன் சுரங்க நிலைய ரயில் மோதி உயிரிழந்து இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர்
திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் லண்டனில் விபத்து ஏற்படுத்த கூடும் என்ற அச்சத்தில் ஷெப்பர்ட்ஸ் புஷ் அருகே கார் ஒன்றை நிறுத்த பொலிஸார் முயற்சி செய்தனர்.
ஆனால், மேற்கு லண்டன் பொலிஸாரின் துரத்தல் தொடர்ச்சியாக லண்டன் சுரங்க நிலைய ரயில் மோதி அடிபட்டு காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
Sky News
பெயர் குறிப்பிடப்படாத உயிரிழந்த நபர், பொலிஸார் துரத்தலுக்கு முன்னதாக கிழக்கு ஆக்டன் நிலையத்தின் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் காணப்பட்டார் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு ரயில் மோதி உயிரிழந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் துப்பறியும் நபர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் சுற்றிவளைப்பு அகற்றப்பட்டது.
sky News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |