பிரித்தானிய துணை பிரதமர் திடீர் ராஜினாமா: அவரது பதவி யாருக்கு?
பிரித்தானிய துணை பிரதமர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரித்தானிய பிரதமருக்கு மக்களிடையேயும் தன் கட்சியினரிடையேயும் ஆதரவு குறைந்துவரும் நிலையில், அவர் பிரித்தானிய பிரதமர் தனது அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துவருகிறார். இத்தகைய சூழலில், இப்படி ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது தலைப்புச் செய்தியாகியுள்ளது.
பிரித்தானிய துணை பிரதமர் திடீர் ராஜினாமா
பிரித்தானிய துணை பிரதமராக பதவி வகித்த ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவிக்கு வந்ததும் அதிரடியாக பல்வேறு விடயங்களைச் செய்ததால் கவனம் ஈர்த்த ஏஞ்சலா, அமைச்சர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறீயதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
விடயம் என்னவென்றால், இங்கிலாந்தில் இரண்டாவது வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு உப கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், ஏஞ்சலா வீடு வாங்கியபோது அவர் அதுதான் தனது முதல் வீடு என்று கூறியிருந்தார்.
ஆனால், ஏற்கனவே அவரது மகன் பெயரில் ஒரு வீடு உள்ள நிலையில், அவர் கூடுதலாக சுமார் 40,000 பவுண்டுகள் உபகட்டணம் செலுத்தியிருக்கவேண்டும்.
ஆனால், அவர் கட்டணம் செலுத்தாம்ல் ஏமாற்றிவிட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுவந்தன. இந்நிலையில், தனது துணை பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஏஞ்சலா.
புதிய துணை பிரதமர் யார்?
ஏஞ்சலாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அவருக்கு பதிலாக டேவிட் லாம்மியை புதிய துணை பிரதமராக பதவியமர்த்தியுள்ளார்.
விடயம் என்னவென்றால், உண்மையில், வெளியுறவுச் செயலர் என்னும் பெரும் பொறுப்பு வகித்த டேவிட், பதவியிறக்கம் செய்யப்பட்டு அவருக்கு நீதித்துறைச் செயலராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது வெளியில் தெரியாமல் இருக்கும் வகையில்தான் டேவிடுக்கு துணை பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |