மண்டியிட மறுப்பு... டி20 உலகக் கிண்ணம் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்
கருப்பின மக்களுக்கு ஆதரவளிக்க மறுத்த விவகாரத்தில் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் போட்டியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார்.
கருப்பின மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் போட்டியின்போது ஒரு நிமிடம் மண்டியிட வேண்டும் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில், கருப்பின மக்களுக்கு ஆதரவளித்து ஒரு நிமிடம் மண்டியிட மறுத்ததாக கூறி குயின்டன் டி காக் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே குயின்டன் டி காக் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், குயின்டன் டி காக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.